×

ராகிங் சம்பவங்கள் நடந்தால் கல்லூரி முதல்வரே பொறுப்பேற்க வேண்டும்: யு.ஜி.சி. எச்சரிக்கை

சென்னை: கல்லூரியில் அதிக ராகிங் சம்பவங்கள், அதுசார்ந்த வழக்குகள் கண்டறியப்பட்டால், அதற்கு கல்லூரி முதல்வர் பொறுப்பேற்க நேரிடும், தேசிய ராகிங் தடுப்பு கண்காணிப்பு குழுவிடம் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என யு.ஜி.சி. எச்சரித்துள்ளது. கல்லூரிகளில் ‘ராகிங்’ சம்பவத்தை தடுக்க கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ராகிங் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு(யு.ஜி.சி.) அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

உச்சநீதிமன்ற உத்தரவின்படி கல்வி நிறுவனங்களில் ராகிங் செயல்பாட்டை தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் பல்கலைக்கழக மானியக்குழுவால் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது. அதனை பின்பற்றி, கல்லூரிகளில் ராகிங் தடுப்பு மையம் அமைத்தல், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், வளாகங்களில் விழிப்புணர்வு பதாகை வைத்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ராகிங் விதிமுறைகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம்.

எனவே, மாணவர்களிடம் சுமுகமான உறவை ஏற்படுத்த கல்வி நிறுவனங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். ராகிங் தடுப்பு மையங்களுக்கு சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஏதேனும் கல்லூரியில் அதிக ராகிங் சம்பவங்கள், அதுசார்ந்த வழக்குகள் கண்டறியப்பட்டால், அதற்கு கல்லூரி முதல்வர் பொறுப்பேற்க நேரிடும். தேசிய ராகிங் தடுப்பு கண்காணிப்பு குழுவிடம் அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அதனால் ராகிங் அச்சுறுத்தல்களை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வி நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும்.

The post ராகிங் சம்பவங்கள் நடந்தால் கல்லூரி முதல்வரே பொறுப்பேற்க வேண்டும்: யு.ஜி.சி. எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : U. G. C. Warning ,Chennai ,National Rooting Prevention Monitoring Committee ,U.N. G. C. ,Dinakaran ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...